முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

சில முக்கிய மருத்துவ டிப்ஸ்!!!

சில முக்கிய மருத்துவ டிப்ஸ்!!!

கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும். பொன்மேனி தரும் குப்பைமேனி: ...

Read More »

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!!!

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!!!

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும். ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும். ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

Read More »

சிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்!!!

சிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்!!!

ஈரலை பலப்படுத்த கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கவல்லதும், உயிரணுக்களை அதிகரிக்க செய்வதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டதுமான நெறிஞ்சில் தரையோடு படர்ந்து காணப்படும் செடி நெறிஞ்சில். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்கள் சிறிதாக இருக்கும். சிறு நெறிஞ்சில், பெரு நெறிஞ்சில், யானை நெறிஞ்சில் என 3 வகைப்படும். இவைகள் அனைத்தும் ஒரே மருத்துவ குணங்களை கொண்டவை. சிறுநீரகம், பித்தபையில் கற்கள் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நெறிஞ்சில் மருந்தாக விளங்குகிறது. நெறிஞ்சில் உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. அழற்சியை ...

Read More »

உடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை!!!

உடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை!!!

பெண்களுக்கு உடல் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்படும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது, சர்க்கரை நோய், உடல் உழைப்பு இல்லாதது, வீட்டு வேலைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது, மன அழுத்தம், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது போன்றவை உடல் எடை கூடுவதற்கு காரணமாக அமைகிறது. உடல் எடை குறைப்புக்கான கொள்ளு தேனீர் தயாரிக்கலாம். கொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் ...

Read More »

உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக்கீரை!!!

உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக்கீரை!!!

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்ப்போம். உடல் உஷ்ணம் அதிகமானால் வாய் புண், கண் எரிச்சல், தூக்கமின்மை ஏற்படும். இப்பிரச்னைகளை தடுக்க மணத்தக்காளி சூப் தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு, மஞ்சள் பொடி, சமையல் எண்ணெய், உப்பு. அரிசியை ஊறவைத்து அதன் தண்ணீரை மட்டும் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், சின்னவெங்காயம் போடவும். மணத்தக்காளி கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். ...

Read More »

நோய் எதிர்ப்பு சக்தி தரும் விளாம்பழ உணவுகள்!!!

நோய் எதிர்ப்பு சக்தி தரும் விளாம்பழ உணவுகள்!!!

பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. இதன் கொழுந்து, இலை, காய், பிசின், பழம், ஓடு போன்ற அனைத்து பாகங்களும் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘விட்டதடி ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு’ என்றொரு சொலவடை உண்டு. ‘பழத்தின் மீதான ஆசை, ஓட்டை பார்த்ததும் ஓடிவிட்டது’ என்பது இதன் அர்த்தம். விளாங்காய் ஓட்டோடு ஒட்டிய நிலையில் இருக்கும். பழுத்து பக்குவத்திற்கு வந்ததும் எடைகுறைந்து, உள்ளுக்குள்ளேயே ஓட்டைவிட்டு விலகி விடும். நன்கு பழுத்த பழம், புளிப்பு கலந்த இனிப்பு சுவைதரும். எண்ணற்ற ...

Read More »

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!!!

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!!!

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். சரியாக சாப்பிடுதல் சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை ...

Read More »

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு!!!

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு!!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொள்ளு – கம்பு புட்டை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கம்பு – ஒரு கப் கொள்ளு – கால் கப் சுக்கு – 2 செய்முறை : * கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். * ஆறியவுடம் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். * பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு ...

Read More »

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை!!!

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை!!!

தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும்.  ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) . ‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம். இதனுடைய பயன்கள் அளவிட முடியாதவை. தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில் ‘அவிஸி கிற்சலு’, மலையாளத்தில் ‘செருவுசான வித்து‘, கன்னடத்தில் ‘அகஸி’, ஹிந்தியில் ‘அல்ஸி‘ ...

Read More »

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க்!!!

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க்!!!

முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக மாற மஞ்சள் பேஸ் மாஸ்க் போடுங்க.  நீங்கள் மஞ்சள் பேக் வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும். சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும். எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல. மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேபோல் தேனையும் ...

Read More »