முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

ஜி.வி. பிரகாஷுக்கும் அதுக்கும் ராசியே இல்லையா?

ஜி.வி. பிரகாஷுக்கும் அதுக்கும் ராசியே இல்லையா?

ஜி.வி. பிரகாஷ்  இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி நடிகராக கலக்கி வருகிறார். தற்போது அவர் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற திரைப்படம் வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஜி.வி  நடித்த த்ரிஷா இல்லைனா நயன்தாரா A சான்றிதழ், டார்லிங் மற்றும் பென்சில் ஆகிய படங்கள் UA சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கும் UA சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜி.வி.பிரகாஷ் நடித்த எந்த படங்களும் U சான்றிதழ் பெறவில்லை ...

Read More »

தல-57 படப்பிடிப்பு எங்கு எப்போது தொடக்கம்? புதிய தகவல்!!!

தல-57 படப்பிடிப்பு எங்கு எப்போது தொடக்கம்? புதிய தகவல்!!!

அஜித் ரசிகர்கள் அனைவரும் சில நாட்களவே வருத்தத்தில் தான் உள்ளனர். வேதாளம் படத்திற்கு பிறகு காலில் அறுவை சிகிச்சை செய்த அஜித் நீண்ட ஓய்வு எடுத்துவிட்டார். இதை தொடர்ந்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 15ம் தொடங்கவுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாம். பெரும்பாலும் ஐரோப்பா அல்லது ஆஸ்திரேலியா நாட்டில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வந்துள்ளது.

Read More »

கமல்ஹாசன் படத்திற்கு சிக்கல்?

கமல்ஹாசன் படத்திற்கு சிக்கல்?

கமல்ஹாசன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று அருந்ததியர் முன்னேற்ற பேரவையினர் கோவை கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வக்கீல் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘சபாஷ் நாயுடு’ பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அருந்ததியர் முன்னேற்ற ...

Read More »

விஷாலுக்கு வந்த புதிய எதிர்ப்பு!!!

விஷாலுக்கு வந்த புதிய எதிர்ப்பு!!!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பரபரப்பிலேயே இருப்பவர். நடிகர் சங்கத் தேர்தல், திருட்டு விசிடி என பல சர்ச்சைகளுடன் வலம் வருபவர். இவர் சமீபத்தில் நடந்த விலங்குகள் நல அமைப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது Face of Animal Activism 2015 என்ற விருது கவர்னர் கையால் வழங்கப்பட்டது. அந்தவிழாவில் பேசுகையில் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடந்த தேர்தலில் கூட பல கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதாக கூறி வாக்குறுதிகள் தந்திருந்தன. இந்நிலையில் விஷாலின் இந்த ...

Read More »

இளையராஜாவுக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

இளையராஜாவுக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லா இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் அண்மையில் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சோதனையில் அவர் கொண்ட வந்த விபூதி, தேங்காய் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர். அதோடு விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Read More »

மேடையில் கண்கலங்கிய பிரபு சாலமன்! வீடியோ இணைப்பு!!!

மேடையில் கண்கலங்கிய பிரபு சாலமன்! வீடியோ இணைப்பு!!!

மைனா, கும்கி, கயல் என தரமான தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தொடரி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்து முடிந்தது. இதில் இயக்குனர் செல்வராகவன், பிரபு சாலமனின் கடின உழைப்பை பற்றி பேசினார். அப்போது மேடையேறிய பிரபு சாலமன் ஒரு நொடி ஏதும் பேசாமல் செல்வராகவனை பிடித்துக்கொண்டு கண்கலங்கினார்.

Read More »

கலக்கலாக வர்ணித்த பார்த்திபன் கீர்த்தி சுரேஷை – அரங்கமே அதிர்ந்தது!!!

கலக்கலாக வர்ணித்த பார்த்திபன் கீர்த்தி சுரேஷை – அரங்கமே அதிர்ந்தது!!!

பார்த்திபன் எங்கு மேடையேறினாலும் கலக்கலாக பேசுவார். இன்று தொடரி இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் கலந்துக்கொண்டார். இதில் பேசிய பார்த்திபன், கீர்த்தி சுரேஷை புகந்து தள்ளி விட்டார். இவர் பேசுகையில் ‘மேனகா, ரம்பா, ஊர்வசி ஆகியோரை மிக்சியில் அடித்த போது வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்’ என கூறினார். இதைக்கேட்டு கீர்த்தி சுரேஷ் வெட்கத்தில் தலைகுனிய, அரங்கமே அதிர்ந்தது.

Read More »

“விஜய், ராகவா லாரன்ஸ் வரிசையில் ஜி.வி.பிரகாஷ்” !!!

“விஜய், ராகவா லாரன்ஸ் வரிசையில் ஜி.வி.பிரகாஷ்” !!!

லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் இன்று சென்சார் செய்யப்படவுள்ளதால் சென்சாருக்கு பின்னர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சுமார் அரை டஜன் படங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் கமிட் ஆகியுள்ள நிலையில் கோலிவுட்டின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு ...

Read More »

சிம்புவின் பில்லா ரீமேக்கை நான் இயக்குகிறேன்- பிரபல இயக்குனர் வேண்டுகோள்!!!

சிம்புவின் பில்லா ரீமேக்கை நான் இயக்குகிறேன்- பிரபல இயக்குனர் வேண்டுகோள்!!!

சிம்பு நேற்று ரசிகர்களிடன் டுவிட்டரில் வீடியோ மூலம் கலந்துரையாடினார். இதில் அஜித் நடித்த பில்லா படத்தை 2018ம் ஆண்டு ரீமேக் செய்கிறேன் என்று கூறினார். இதன் நாமே நேற்று நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் இப்படத்தை நான் இயக்குகிறேன் என வெங்கட் பிரபு வேண்டுக்கோள் வைத்துள்ளார். சிம்புவும் இதற்கு ஓகே சொல்ல, படம் தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More »

தெறி படத்தால் 8 திரையரங்குகள் மூடப்பட்டது- அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

தெறி படத்தால் 8 திரையரங்குகள் மூடப்பட்டது- அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

தெறி இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மாபெரும் வசூல் செய்த படம். ஆனால், செங்கல்பட்டு பகுதிகளில் இப்படத்தை ரிலிஸ் செய்யவில்லை. ஆனால், திரையரங்க உரிமையாளர் சங்க விதிகளை மீறி 8 திரையரங்குகள் இப்படத்தை ரிலிஸ் செய்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த 8 திரையரங்குகளுக்கு ரெட் அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாம். கபாலி படத்தையும் இந்த திரையரங்கில் ரிலிஸ் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.

Read More »