முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

சூப்பர் ஸ்டார், இளைய தளபதி சந்திப்பு- நடந்தது என்ன? முழு விவரம் !!!

சூப்பர் ஸ்டார், இளைய தளபதி சந்திப்பு- நடந்தது என்ன? முழு விவரம் !!!

தமிழ் சினிமாவில் இன்றும் நம்பர் 1 இடத்தில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நேற்று பைரவா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது, அதே இடத்தில் தான் 2.0 ஷுட்டிங் நடந்து வந்துள்ளது, ரஜினி இருப்பதை அறிந்து விஜய் மரியாதை நிமித்தமாக நேராக சென்று பார்த்துள்ளார். சில மணி நேரம் ரஜினியிடம் பேசியுள்ளார், 2.0 மேக்கப்பில் இருந்ததால் ரஜினியுடன், விஜய் எந்த ஒரு புகைப்படமும் எடுத்துக்கொள்ளவில்லையாம்.

Read More »

யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்! அதிரடி முடிவில் சரத்குமார் !!!

யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்! அதிரடி முடிவில் சரத்குமார் !!!

நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சரத்குமார் நேற்று நடந்த பொது குழு கூட்டத்திற்கு பிறகு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் நான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறியிருந்தார். எங்களை நீக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை என கூறினார். தற்போது அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று இரவு 9 மணிக்கு கேள்வி பதில் நேரம், நீங்கள் யார் வேண்டுமானாலும் எனது அதிகார பூர்வ சமூக வலை பக்கத்தில் தன்னிடம் கேள்வி கேட்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Read More »

தனுஷ் இவர்களுடைய மகன் தான், ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் !!!

தனுஷ் இவர்களுடைய மகன் தான், ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் !!!

நாட்டில் வரவர என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்றே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நடந்துள்ளது இங்கு ஒரு விஷயம். தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதில் தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக கூறியுள்ளனர், ஆனால், தனுஷ் குழந்தையிலிருந்து கஸ்துரிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதற்கு மேலாவது இந்த வழக்கில் முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும்.

Read More »

ரஜினியை பற்றி மீண்டும் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!!

ரஜினியை பற்றி மீண்டும் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!!

நடிகர் மன்சூர் அலிகான் நேற்று  நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர். “முன்னணி நடிகர்களான ரஜினி கமல் இந்த பொதுக்குழுவுக்கு வரவில்லையே என்று கேள்வி க்கு “பாவம் இரண்டு பேருக்குமே வயசு ஆச்சு கமல் Skype லே பேசினார். ரஜினி அவர் படத்துக்காக பம்பாய்க்கு போவார், ஆனால் பொதுக்குழுவுக்கு வரமாட்டாரு. நான் சின்ன நடிகன் கொஞ்சம் நாணயமா இருக்கேன், அவங்க எல்லாம் பெரிய நடிகரா ஆகிட்டாங்க என்று குறிப்பிட்டார்.

Read More »

என்னை நீக்கியதை நான் சட்டப்படி சந்திப்பேன்- சரத்குமார் !!!

என்னை நீக்கியதை நான் சட்டப்படி சந்திப்பேன்- சரத்குமார் !!!

நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிக நீக்கம் என்று கூறப்பட்ட சரத்குமார் இப்போது முழுமையாக சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது ...

Read More »

ஆந்திராவையும் அதிர வைத்த சிவகார்த்திகேயன், வேற லெவல் மாஸ் !!!

ஆந்திராவையும் அதிர வைத்த சிவகார்த்திகேயன், வேற லெவல் மாஸ் !!!

சிவகார்த்திகேயன் குறித்து பல சர்ச்சைகள் இருக்கின்றது. ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். இவர் நடித்த ரெமோ படம் தமிழ் பதிப்பு மட்டுமே ரூ 80 கோடி வசூல் செய்ய, தற்போது தெலுங்கு பதிப்பு நேற்று ரிலிஸாகியுள்ளது. படம் ஆந்திராவிலும் செம்ம வரவேற்பு பெற்றுள்ளதாம், கண்டிப்பாக ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என கூறும் நிலையில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் ரூ 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி.

Read More »

விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் – பைரவா பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் ட்வீட் !!!

விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் – பைரவா பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் ட்வீட் !!!

இளையதளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது பைரவா. சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலை தங்கள் இசையில் பாட வைத்துவிடுகிறார்கள். இந்நிலையில் பைரவா படத்தில் விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் ஒன்று இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பாடலுக்கான நடனம் பயங்கரமாக உள்ளது, கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

Read More »

பாடகி வைக்கோம் விஜயலக்ஷமிக்கு திருமணம் !!!

பாடகி வைக்கோம் விஜயலக்ஷமிக்கு திருமணம் !!!

தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் கட்டிப்போட்டவர் வைக்கோம் விஜயலக்ஷமி. இவரின் குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும். தமிழில் பல படங்களில் பாடல்கள் பாடிய இவர் ஒரு கண் பார்வையற்றவர். தற்போது இவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. கேரளாவில் இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் என்பவரை தான் இவர் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் டிசம்பர் 13ம் தேதியும், திருமணம் அடுத்த வருடம் மார்ச் 29ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

Read More »

நடிகை சபர்ணா மரணத்தில் திடுக்கிடும் தகவல்! ஸ்டண்ட் நடிகர் சிக்கினார் !!!

நடிகை சபர்ணா மரணத்தில் திடுக்கிடும் தகவல்! ஸ்டண்ட் நடிகர் சிக்கினார் !!!

சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்து வந்த நடிகை சபர்ணா சிலநாட்களுக்கு முன் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் பரவியது. பின் பிரேத பரிசோதனையின் போது அவரின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களை வைத்து கை நரம்பை அறுத்துக்கொண்டு தான் இறந்திருக்கிறார் என சொல்லப்பட்டது. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தது. இதில் அருகிலிருப்பவர்களை விசாரித்தபோது அவருக்கும் பிரபல ஸ்டண்ட் நடிகருக்கும் நீண்ட நாள் தொடர்பிருப்பது தெரிய வந்தது. வீட்டை விட்டு தனியே சென்னையில் வாழ்ந்த சபர்ணாவிற்கு ...

Read More »

தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?

தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தன்னுடைய மகன் என்று மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி உரிமை கொண்டாடி வருகின்றனர். அவர் பெயர் கலைச்செல்வன் என்றும், திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நேரில் ...

Read More »