முக்கிய செய்திகள்

அதிகாலையிலேயே இணைத்தில் வெளியான பைரவா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

VH8faAc3dasfasfasf

இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக நாளை வெளியாகிறது பைரவா. முன்னதாக இன்று இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது.

இந்த படத்தை பார்க்கு சில ரசிகர்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

வழக்கமாக சில திருட்டு இணையதளங்கள் மட்டுமே செய்து வந்த இந்த செயலை இப்போது ரசிகர்களும் செய்ய தொடங்கியிருப்பது சினிமாவுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. முக்கிய காட்சிகள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், பிரபலாமான திருட்டு இணையதளங்களில் இன்று அதிகாலையே பைரவா முழுப்படமும் வெளியாகியிருப்பது படக்குழுவினை மேலும், அதிர்சிகுள்ளாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படமும் அதிகாலையே இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*