முக்கிய செய்திகள்

கண்கள் அடிக்கடி சிவந்து போவது அலர்ஜியினால் மட்டுமா ? வேறு எதற்கான அறிகுறிகள்?

11-1484115084-pinkeyeபெரும்பாலோர் கண்கள் சிவந்திருந்தால் ஏதோ அலர்ஜி போலிருக்கிறது என்று கடைகளில் ஒரு சொட்டு மருந்தை வாங்கி போடுவார்கள்.

இது தவறான அணுகுமுறை. வெறும் அலர்ஜி மட்டும் கண்கள் சிவந்து போவதற்கு காரணமல்ல. பல பாதிப்புகளின் அறிகுறியாகவும் கண்கள் சிவந்து போகலாம்.

என்ன காரணம் என தெரிந்து சரியான சிகிச்சை அளிக்கவில்லையென்றால் பார்வை பறிபோகும் அபாயம் வரை நடக்க வாய்ப்புகள் உண்டு. கண்கள் ஏன் சிவந்து போகிறது என்பதற்கு இவைகளும் காரணமாக இருக்கலாம். தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட மாத்திரை வகைகள் :

அலர்ஜிக்கு எதிரான மாத்திரைகளான ஆன்டி ஹிஸ்டமின் மற்றும் தூக்க மாத்திரைகள் கண்களை வறண்டு போகச் செய்வதுடன் அலர்ஜியையும் தருகின்றன. இவைகள் கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் ரத்த ஓட்டத்தை குறைக்கச் செய்வதால் கண்கள் சிவப்பாகின்றன.

கண் வெள்ளையாக்கும் சொட்டு மருந்து :

கண்கள் சிவப்பாகாமல் தடுக்கும் வொயிட்டனிங்க் சொட்டு மருந்து உண்மையில் உங்கள் கண்களை மேலும் மோசமாக்கும். இவைகளை தொடர்ந்து உபயோகிக்கும்போது கண்கள் அந்த மருந்திற்கு பழகிக் கொள்ளும். இதற்கிடையில் இந்த மருந்தை நிறுத்தினால் உனடனியாக மீண்டும் சிவந்து விடும். ஆகவே கண்களில் உபயோகப்படுத்தும் சொட்டு மருந்தும் காரணம்.

அதிகமாக மது அருந்துதல் :

அதிக மது அருந்தும்போது ரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனால் கண்களைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து கண்களை சிவந்து போகச் செய்கின்றன.

புகைப்பிடித்தல் :

சிகரெட் அடிக்கடி புகைக்கும்போது கண்களைச் சுற்றியுள்ள நரம்புகள் இறுக்கமடைகின்றன. இதன் காரணமாக கண்கள் சிவந்து போகலாம்.

பிங்க் ஐ :

பிங்க் ஐ என்பது வைரஸ் அல்லது பேக்டீரியாக்களால் தொற்று உண்டாகி அதன் விளைவாக கண்கள் சிவந்து போவதாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

நீச்சல் அடிப்பதால் :

நீச்சல் குளத்தில் கலக்கப்படும் குளோரின் கண்களின் செயல்படும் நல்ல பேக்டீரியக்களை அழிக்கிறது. இதனால் கண்கள் சிவந்து வறட்சி எரிச்சல் உண்டாகும்.

தவறான முறையில் தூங்குவது :

நீங்கள் கண்கள் அழுந்தும் வகையில் தவறான முறையில் தூங்கும்போது ரத்த அழுத்தம் திடீரென கண்களில் அதிகமாகி சிவந்து போகும் வாய்ப்புகள் உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*