முக்கிய செய்திகள்

அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க..! – அஜித் குறித்து சிவா பதட்டம்

zRNz9tPnajaaithசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 57 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்கேரியா, ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல முக்கிய இடங்களில் படப்பிடிப்புகள் நடந்துவருகிறது.

இதில் நடித்துவரும் அஜித் சண்டை காட்சிகளுக்காக 29 அடி உயர மாடியிலிருந்து குதித்துள்ளாராம். இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காததால் படக்குழுவில் இருந்தவர்கள் பதட்டமடைந்து விட்டார்களாம்.

கடுமையாக ரிஸ்க் எடுக்கும் அவரை பார்த்து அனைவரும் வியந்துள்ளார்களாம். ஒவ்வொரு படங்களிலும் அவர் இது போல் ரிஸ்க் எடுத்து நடிப்பது வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே ஆரம்பம்  படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது தான் அஜீத் தயாராகி இருக்கிறார்.

மீண்டும், ஸ்டன்ட் ரிஸ்க் எடுப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாகியது. சமூக வலைதளங்களில் இது குறித்து சிறுத்தை சிவாவிடம் அஜித் ரசிகர்கள் “அஜித் சாரை பத்திரமா பாத்துகோங்க சார் என்று இயக்குனர் சிவா-விடம் வேண்டுகோள் வைக்க, அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க…! என்று பதறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*