முக்கிய செய்திகள்

விவசாயிகளின் கண்ணீர் இதயம் பிளக்கிறது, பொங்கல் கொண்டாட மாட்டேன்: நடிகர் விவேக்

Captureசென்னை: இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. கருகும் பயிர்களை பார்த்து விவசாயிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பொங்கல்

விவசாயிகள் துன்பத்தால் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். ஆயினும் மஞ்சள் கரும்பு பானை வாங்கி உழவர் வாழ்வில் வளம் சேர்ப்போம்

விவசாயி

நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல; விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல; மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல!

கண்ணீர்

இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது.

ஜி.வி. பிரகாஷ்

கருகும் பயிர்களை பார்த்து வாடும் விவசாய குடும்பங்களுக்கு உதவ நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*